Sachein Re Release Day 2 Box Office Collection : தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடித்த சச்சின் படம் கடந்த ஏப்ரல் 18ந் தேதி ரீ-ரிலீஸ் ஆனது. காதல் நகைச்சுவைப் படமாக வெளியான சச்சினில், விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்தார். ஜான் மகேந்திரன் இயக்கிய இப்படத்தில் பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய், மோகன் சர்மா, பேபி சர்மி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் முதன்முதலில் 2005ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று வெளியானது. அப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தற்போது சச்சின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.