கடைசி வரை நன்றியுடன் இருப்பேன்.. நடிகை பாவனி ரெட்டியின் லவ்வர் அமீர் சொன்ன குட் நியூஸ்!
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் வைரலான அமீர் - பாவனி காதல் ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amir Pavani Latest Pics
விஜய் டிவியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வரும் இந்நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். பிளாக்பஸ்டர் நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி பல காதல் கதைகளுக்கு சாட்சியாக இருந்து வருகிறது.
Bigg Boss Pavani Reddy
ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் ஒவ்வொரு ஜோடியும் பிரிந்து செல்கிறார்கள். ஆனால் பிக்பாஸ் சீசன் 6-ன் போது காதலித்த அமீரும் பாவனியும் தற்போது வரை தங்கள் உறவை தொடர்கின்றனர். இருவரும் கடந்த பல மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
Bigg Boss Tamil
அமீரும் பாவனியும் திரையுலகில் நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக முன்னதாக கூறியுள்ளனர். கடந்த ஆண்டு தங்களை முன்னணி ஜோடியாகவும், அமீர் இயக்குனராகவும் ஒரு புதிய படத்தைத் தொடங்கினார்கள்.
Serial Actress
இந்த ஜோடி பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்கள். அங்கு அவர்கள் முதல் இடத்தைப் பெற்றனர். அமீர் இந்தியாவின் முன்னணி நடனக் கலைஞரும், நடிகருமான பிரபுதேவாவின் மிகப்பெரிய ரசிகர். 7 மணி நேரம் தொடர்ந்து நடனமாடியதற்காக அவரது பெயர் லிம்கா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் எழுதப்பட்டுள்ளது.
Actress Pavani
நடிகை பாவனி ரெட்டி 2012 ஆம் ஆண்டு பாலிவுட் படமான லாஜின் மூலம் நடிப்பில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 2017 இல் சின்ன தம்பி என்ற சீரியலில் நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமடைந்தார். இவரது முதல் கணவர் இறந்து விட, தற்போது அமீருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
Ameer
இந்த நிலையில் நடன இயக்குனர் அமீர் தன்னுடைய காதல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை நேசிப்பதாக உணரவும், எங்கள் உறவை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற நீங்கள் செய்யும் அனைத்து அன்பிற்கும் நன்றி.
Ameer Pavani Photos
என்னை நிபந்தனையின்றி நேசிக்கும் விதத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று பதிவிட்டு பாவனியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அமீர். இது பரவலாக வைரலாகி வருகிறது.
எனக்கு இனி பிள்ளையே இல்ல... கோபியை ஒரேயடியாக தலை முழுவிய ஈஸ்வரி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!