தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் அட்லீ. அவர் தற்போது பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அங்கு அவர் இயக்க உள்ள முதல் திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தான் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
24
அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்கின்றனர். ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், தற்போது படத்தின் ஷூட்டிங் செம்ம ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது.
இதனிடையே ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் தற்போது லியோ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம் அட்லீ.
44
இறுதியாக அவருக்கு ஓகே சொல்லியிருப்பது புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் தானாம். விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக மிரட்டிய சூர்யாவின் கேரக்டர் போல் ஜவானிலும் அல்லு அர்ஜுனுக்கு செம்ம மாஸான கேமியோ ரோலை கொடுத்துள்ளாராம் அட்லீ. விரைவில் அல்லு அர்ஜுன் ஜவான் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.