பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டாலே காதலர் தின கொண்டாட்டங்கள் களைகட்டிவிடும். அந்த வகையில், காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதிக்கு முந்தைய வாரம் முழுவதும் டெடி டே, ஹக் டே, சாக்லேட் டே, கிஸ் டே என ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் காதலர் தின கொண்டாட்டங்கள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.
நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று கிஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. கிஸ் டேவில் மனதுக்கு பிடித்தவர்களுக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தலாம். அந்த வகையில், கோலிவுட்டின் மனம்கவர்ந்த ஜோடியான விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் முத்தமிட்டுக்கொண்ட அழகிய தருணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.