அவங்கள மாதிரிலாம் என்னால நடிக்க முடியாதுப்பா... ஜோதிகாவை புகழ்ந்து தள்ளிய ‘புது’ சந்திரமுகி

Published : Feb 13, 2023, 11:20 AM ISTUpdated : Feb 13, 2023, 11:21 AM IST

சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பளிக்கும் வகையில் இருந்ததாகவும், அதனை ஈடுசெய்வது சாத்தியமற்றது என்றும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

PREV
14
அவங்கள மாதிரிலாம் என்னால நடிக்க முடியாதுப்பா... ஜோதிகாவை புகழ்ந்து தள்ளிய ‘புது’ சந்திரமுகி

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இதில் நாசர், மாளவிகா, பிரபு, வடிவேலு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், அதில் ஜோதிகாவின் நடிப்புக்கு அதிகளவில் பாராட்டுக்கள் கிடைத்தது. சந்திரமுகியாகவே வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இன்றளவும் ஜோதிகாவின் அந்த கேரக்டர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.

24

தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு பதில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் காமெடியனாக கலக்கிய வைகைப்புயல் வடிவேலு, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க ஜோதிகாவுக்கு பதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதையும் படியுங்கள்... நயன்தாரா மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன்... லேடி சூப்பர்ஸ்டார் மீது பாசமழை பொழிந்த மாளவிகா மோகனன்

34

இயக்குனர் பி.வாசு வேறு ஒரு படத்தின் கதையுடன் தான் கங்கனாவை சந்திக்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் தற்போது தான் சந்திரமுகி 2 இயக்கி வருவது குறித்து பி.வாசு சொன்னதும், உடனடியாக தான் அந்த படத்தில் நடிப்பதாக கூறி இருக்கிறார் கங்கனா. அவரே விருப்பப்பட்டு கேட்டதால் பி.வாசுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இப்படி தான் சந்திரமுகி 2 படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கமிட் ஆகி இருக்கிறார்.

44

இந்நிலையில், டுவிட்டரில் ஜோதிகா சந்திரமுகியாக நடித்தது குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார் கங்கனா. அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “உண்மையில் சந்திரமுகியில் ஜோதிகாவின் ஐகானிக் நடிப்பை நான் தினந்தோறும் பார்த்து வருகிறேன். ஏனென்றால் நாங்கள் தற்போது கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி வருகிறோம். முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பளிக்கும் வகையில் இருந்தது. அவரின் இந்த நடிப்பை ஈடுசெய்வது என்பது சாத்தியமற்றது” என புகழ்ந்து பதிவிட்டுள்ளார் கங்கனா ரனாவத்.

இதையும் படியுங்கள்... காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார்... விக்ரம், மாஸ்டர் பட பிரபலம் மீது இளம்பெண் புகார்

Read more Photos on
click me!

Recommended Stories