நயன்தாரா மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன்... லேடி சூப்பர்ஸ்டார் மீது பாசமழை பொழிந்த மாளவிகா மோகனன்

First Published | Feb 13, 2023, 10:19 AM IST

நடிகை நயன்தாராவுக்கும், மாளவிகா மோகனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து மாஸ்டர் பட நாயகி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனனுக்கு ஜோடியாக மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கிறிஸ்டி படத்தின் டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் புரமோஷன் பணிகளும் படுபிசியாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கிறிஸ்டி பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை மாளவிகா மோகனனிடம் லேடி சூப்பர்ஸ்டார் டைட்டில் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்காமல் சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கலாம் என்று கூறி இருந்தார். கத்ரீனா கைப், ஆலியா பட், தீபிகா படுகோனே ஆகியோரை சூப்பர்ஸ்டார் என்று அழைத்தாலே போதும் என கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார்... விக்ரம், மாஸ்டர் பட பிரபலம் மீது இளம்பெண் புகார்

Tap to resize

நடிகை மாளவிகா மோகனனின் இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை தான் மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ளதாக கமெண்ட் செய்து வந்தனர். இது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது. இதையடுத்து ஊடகங்களிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகி வைரலானது. நம்முடைய ஏசியநெட் தமிழ் வெப்சைட்டிலும் இதுகுறித்த செய்தியை பதிவிட்டு இருந்தோம்.

இதைப்பார்த்த நடிகை மாளவிகா மோகனன், இந்த சர்ச்சை குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் பதிவிட்டுள்ளதாவது : “நான் குறிப்பிட்ட எந்த நடிகையையும் குறிப்பிடவில்லை, பெண் நடிகைகளை பற்றி தான் என்னுடைய கருத்தை தெரிவித்தேன். நான் நடிகை நயன்தாரா மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஒரு சீனியராக அவரது அசாத்தியமான இந்த பயணத்தை நான் வியந்து பார்க்கிறேன். ப்ளீஸ் அமைதியாக இருங்கள். நயனுக்கு எப்போதும் என் அன்பு உண்டு” என ஹார்டினை பறக்கவிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

இதையும் படியுங்கள்... பால்வண்ண மேனியை பளீச் என காட்டி! சைடு போஸில் கிக் ஏற்றும் ‘டான்’ நாயகி பிரியங்கா மோகன் - வைரல் கிளிக்ஸ் இதோ

Latest Videos

click me!