பால்வண்ண மேனியை பளீச் என காட்டி! சைடு போஸில் கிக் ஏற்றும் ‘டான்’ நாயகி பிரியங்கா மோகன் - வைரல் கிளிக்ஸ் இதோ
தமிழில் செம்ம பிசியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன், கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கேங்லீடர் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீசான டான் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் பிரியங்கா. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பிரியங்காவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
அந்த வகையில் கோலிவுட்டில் அறிமுகமான சில மாதங்களிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பிரியங்காவுக்கு கிடைத்தது. அதன்படி பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் மனைவியாக நடித்து அசத்தி இருந்தார் பிரியங்கா. இதன்பின் சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியங்கா, சிபி சக்ரவர்த்தி இயக்கிய டான் படத்தில் நடித்தார். இப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் பிரியங்கா மோகன்.
இதையும் படியுங்கள்... அடேங்கப்பா வெறும் 7 நாள் நடிக்க இத்தனை கோடியா! லால் சலாம் படத்திற்காக ரஜினி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இவ்வாறு கோலிவுட்டில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து வரும் பிரியங்காவுக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கி உள்ளன. அதன்படி தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பிரியங்கா. இதுதவிர ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.\
இப்படி கோலிவுட்டில் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வரும் பிரியங்கா மோகன், போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது சைடு போஸில் பால்வண்ண மேனியை பளீச் என காட்டி, செம்ம கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா. இந்த புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவித்து வரும் ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட்டுகளையும் அள்ளிவீசி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இயக்குனர் பா.ரஞ்சித்தின் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசன் எடுத்த புகைப்படம் - வைரல் போட்டோஸ் !!