இயக்குனர் சுகுமார் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இயக்கிய திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்த இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஃபஹத் பாசில், ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, சுனில் ராவ் ரமேஷ், தனஞ்சயா, அஜய் கோஷ் அனசுயா பரத்வாஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், புஷ்பா படத்தில் இடம்பெற்ற.... ஸ்ரீவள்ளி பாடல் கூகுளில் சிறந்த பாடல்களில் டாப் 10 லிஸ்டில், 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை கூகுளின் ஹம் டு சர்ச் வெளியிட்டுள்ளது. ஸ்ரீ வள்ளி பாடலில் மிகவும் எதார்த்தமான, அல்லு அர்ஜுனின் வித்தியாசமான நடன அசைவுகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை, தமிழ், தெலுங்கு. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். ஹிந்தியில் ஜாவித் அலி பாடி இருந்தார். இவர் பாடிய இந்த பாடல் தான் தற்போது டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.