2022ல் பாப்புலராக இருந்த டாப் 10 இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் தனுஷ் முதலிடம்.. விஜய், அஜித் லிஸ்ட்லயே இல்ல

First Published Dec 7, 2022, 3:00 PM IST

2022-ம் ஆண்டு மிகவும் பாப்புலராக இருந்த டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை பிரபல சினிமா தர மதிப்பீடு தளமான IMDb வெளியிட்டுள்ளது. 

உலக அளவில் ரிலீசாகும் படங்களை தர மதிப்பீடு செய்து, அதனை பட்டியலிடும் தளம்தான் IMDb. அந்த தளம் தற்போது இந்த ஆண்டு மிகவும் பாப்புலராக இருந்த டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். IMDb தளத்தின் மூலம் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளதற்கு காரணம், இந்த ஆண்டு அவர் நடித்த 4 படங்கள் ரிலீசாகி இருந்தது. அதிலும் குறிப்பாக அவர் நடித்த ஹாலிவுட் படமான கிரே மேன் படமும் இந்த ஆண்டு தான் ரிலீசானது. இது தவிர தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசாகி இருந்தன.

இதையும் படியுங்கள்... ‘சில்லா சில்லா’வை தொடர்ந்து... துணிவு படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் லீக்கானது - ஷாக் ஆன படக்குழு

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகைகள் ஆலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக ஆர்.ஆர்.ஆர் பட நாயகன் ராம்சரண் 4-வது இடத்திலும், நடிகை சமந்தா 5-வது இடத்தையும் பிடித்துள்ளார். பாலிவுட் நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோருக்கு 6 மற்றும் 7-வது இடம் கிடைத்துள்ளது.

தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் இந்த பட்டியலில் முறையே 8 மற்றும் 9-வது இடத்தை பிடித்துள்ளனர். கன்னட நடிகர் யாஷ் 10-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய் ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் பாபா ரீ-ரிலீஸ் வரை... இந்த வாரம் ரிலீசாகும் தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

click me!