‘சில்லா சில்லா’வை தொடர்ந்து... துணிவு படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் லீக்கானது - ஷாக் ஆன படக்குழு

Published : Dec 07, 2022, 02:17 PM IST

அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் நேற்று லீக்கான நிலையில், இன்று துணிவு படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் லீக் ஆகி உள்ளது.

PREV
14
‘சில்லா சில்லா’வை தொடர்ந்து... துணிவு படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் லீக்கானது - ஷாக் ஆன படக்குழு

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் துணிவு. இயக்குனர் எச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும். இப்படத்தில் நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் பிரபலங்கள் மமதி சாரி, பாவனி, அமீர், சிபி ஆகியோரும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

24

துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் முதல் பாடலான சில்லா சில்லா என்கிற பாடல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. பாடல் வெளியாவதற்கு இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில், நேற்று இரவு ஆன்லைனில் அப்பாடல் லீக்கானது.

இதையும் படியுங்கள்... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் பாபா ரீ-ரிலீஸ் வரை... இந்த வாரம் ரிலீசாகும் தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

34

அனிருத் பாடிய அப்பாடலின் முழு ஆடியோவும் லீக்காததது படக்குழுவுக்கு சற்று ஆறுதலை தந்தது. அந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் லீக் ஆகி உள்ளது. துணிவு படத்திற்காக ஹிப்ஹாப் ஆதி பாடியுள்ள காசேதான் கடவுளடா என்கிற பாடல் தான் தற்போது லீக் ஆகி உள்ளது.

44

இவ்வாறு தொடர்ந்து பாடல்கள் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், படத்தின் புரமோஷனுக்காக வேண்டுமென்றே இதுபோன்று லீக் செய்யப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகை அஞ்சலி - எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories