நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் பாபா ரீ-ரிலீஸ் வரை... இந்த வாரம் ரிலீசாகும் தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

Published : Dec 07, 2022, 01:31 PM IST

தமிழகத்தில் வருகிற டிசம்பர் 9-ம் தேதி வடிவேலுவின் நாய்சேகர் ரிட்ட்ர்ன்ஸ், ரஜினியின் பாபா ரீ-ரிலீஸ் என மொத்தம் 7 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் பாபா ரீ-ரிலீஸ் வரை... இந்த வாரம் ரிலீசாகும் தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் நடித்துள்ள படம் இது என்பதால் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

25

பாபா ரீ-ரிலீஸ்

ரஜினிகாந்த் தயாரித்து நடித்த பாபா திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியது ரஜினிகாந்த் தான். இப்படம் தற்போது புதுப்பொலிவுடன் வருகிற டிசம்பர் 10-ந் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... பழசுக்கு வந்த திடீர் மவுசு... ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்வதற்காக பழைய படத்தை தூசி தட்டி எடுக்கும் அஜித்?

35

வரலாறு முக்கியம்

சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள வரலாறு முக்கியம் திரைப்படமும் வருகிற டிசம்பர் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக காஷ்மிரா நடித்துள்ளார். ஷான் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

45

விஜய் ஆனந்த்

கேஜிஎப், காந்தாரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த கன்னட சினிமாவில் இருந்து தயாராகி உள்ள படம் தான் விஜய் ஆனந்த். பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ள இப்படம் வருகிற 9-ந் தேதி தமிழிலும் வெளியாகிறது. விஜய் சங்கரேஸ்வர் என்கிற தொழிலதிபரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

55

குருமூர்த்தி

நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள குருமூர்த்தி திரைப்படமும் வருகிற டிசம்பர் 9-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார். இதுதவிர பிரியாமணியின் டிஆர்56 மற்றும் அசோக் செல்வன் நடித்துள்ள எஸ்டேட் ஆகிய படங்களும் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளன.

இதையும் படியுங்கள்... அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகை அஞ்சலி - எதற்காக தெரியுமா?

click me!

Recommended Stories