என் கணவன் ஒரு சைக்கோ... அவரால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம் - கண்கலங்கிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி

Published : Dec 07, 2022, 11:14 AM IST

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமி, விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.

PREV
14
என் கணவன் ஒரு சைக்கோ... அவரால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம் - கண்கலங்கிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான குக்கூ படத்தில் இடம்பெறும் ‘கோடையில மழை போல’ என்கிற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக காலடி எடுத்து வைத்தார் வைக்கம் விஜயலட்சுமி. இதையடுத்து டி இமான் இசையில் இவர் பாடிய ‘சொப்பன சுந்தரி நான் தானே’ என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.

24

பின்னர் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பாப்புலர் ஆன வைக்கம் விஜயலட்சுமி, மலையாளத்திலும் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி உள்ளார். பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆனது. பின்னர் அந்த மாப்பிள்ளை போடும் கண்டிஷன் தனக்கு செட் ஆகாததால் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

34

பின்னர் 2018-ம் ஆண்டு அனூப் என்கிற மிமிக்ரி ஆர்டிஸ்டை திருமணம் செய்துகொண்டார் வைக்கம் விஜயலட்சுமி. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருமணத்துக்கு பின் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கை கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் வைக்கம் விஜயலட்சுமி.

இதையும் படியுங்கள்.... படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கி... சர்தார் படத்தின் வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய கார்த்தி

44

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்காக கவுதமி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகி வைக்கம் விஜயலட்சுமி, தனது விவாகரத்து குறித்து மனம்விட்டு பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது : “எனது கணவர் ஒரு சேடிஸ்ட் என்பது போகப்போகத்தான் எனக்கு தெரிய வந்தது. அவர் எப்பவுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டி வந்தார். அதையே அவர் முழுநேர பணியாகவும் வைத்திருந்தார். 

திருமணத்துக்கு பின் எனது பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். அதையெல்லாம் விட என்னை பாட்டு பாட கூடாது எனக்கூறி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். மிகவும் டார்ச்சர் செய்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. 

பாடல்கள் தான் எனக்கு உயிர். எப்போதுமே நான் அதற்கு தான் முன்னுரிமை தருபவள். அவருக்காக என் சந்தோஷத்தை தொலைத்து விட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்பவில்லை. பொதுவாக பல்வலி வந்தால் முதலில் அதை பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமானால் அந்த பல்லை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. அதனால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டேன்” என கண்கலங்கியபடி கூறினார்.

இதையும் படியுங்கள்.... அஜித் வரலேனா என்ன.. நாங்க இருக்கோம்! உள்ளூர் முதல் உலகக்கோப்பை வரை ‘துணிவு’டன் இறங்கி புரமோட் செய்யும் ரசிகாஸ்

click me!

Recommended Stories