தற்போது அஜித்தை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் முனைப்பில் அவருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள எச்.வினோத், அவர் நடிக்கும் துணிவு படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. வழக்கம்போல் இந்த படத்தின் புரமோஷனுக்கு வர மறுத்த அஜித், ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவை இல்லை என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.