நடிகை தமன்னா, வட இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும், அவரை பாப்புலர் ஆக்கியது தென்னிந்திய சினிமா. இவர் தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கல்லூரி படத்தில் கனமான கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா, அதன்பின்னர் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கிளாமர் அவதாரத்திற்கு மாறினார்.