தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, தன்னுடைய தந்தை போலவே நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், என பன்முக திறமை கொண்டவராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எனவே அவவ்போது இவருடைய திருமணம் குறித்து அடிக்கடி, வதந்திகள் எழுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. சமீபத்தில் கூட, சிம்பு நடிகை லட்சுமிமேனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அந்த வதந்தியும், வந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
இது குறித்து டி.ராஜேந்தர் கூறியுள்ளதாவது, சீக்கிரமே என் மகனுக்கு திருமண நடக்கும் என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட, என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட,. இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள்? கடவுளின் அருளால் சீக்கிரமே என் மகன் திருமணம் நடக்கும். என டி ராஜேந்தர் கூறியுள்ளார்.