விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டால், அவர்கள் எளிதில் வெள்ளித்திரையில் நுழைந்து விடலாம்.
இவர்களை போலவே கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல விதமான கெட்டப்பில் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் ராமர். குறிப்பாக இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ட்ரோல் செய்யும் விதமாக... லட்சுமி ராமகிருஷ்ணன் கெட்டப்பில் தோன்றி காமெடி செய்வதில் மிகவும் பிரபலம்.
குறிப்பாக இயக்குனர் சுஜார்ஜ் இயக்கத்தில், டிசம்பர் 9 ஆம் தேதி... வைகை புயல் வடிவேலு நடிப்பில் வெளியாக உள்ள, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து சில படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.
இவருடைய வீட்டின் கிரக ப்ரவேசத்தில், விஜய் டிவி பிரபலன்களான செந்தில் கணேஷ், ராஜ லட்சுமி, ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும், இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.