தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த 10 ஆண்டுகளாக நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று முரண்டுபிடித்ததாலும், ரெட் கார்டு போடப்பட்டதாலும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு நடித்த பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள, நடிகை பிரேமா பிரியா தன்னுடைய பட வாய்ப்புகள் நழுவி போனதற்கு வடிவேலுவுடன் சண்டை போட்டது தான் காரணம் என கூறியுள்ளார்.
இவருடைய கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துவிட்டார். கணவர் இருந்த வரை எந்த ஒரு கஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் இருந்த இவருக்கு, இது மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது. தற்போது தன்னுடைய மகள் படிப்பிற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் நடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்பந்தத்தில் வாய்ப்பு தேடி வரும் இவர் வடிவேலுவால் தன்னுடைய பட வாய்ப்புகளை இழந்தது குறித்து பேசியுள்ளார்.
அதாவது, வடிவேலுவிடம் பிரேமா பிரியாவை அறிமுகம் செய்து வைத்த ஆர்டிஸ்டுக்கும், வடிவேலுவுக்கும் இடையே உள்ள பிரச்சனையை காரணம் காட்டி, இவருக்கு வந்த பட வாய்ப்புகளையும் தடுத்ததாகவும் இதனால், ஏவிஎம் ஸ்டுடியோவில் வடிவேலுவிடம் நான் பிரச்சனை செய்ததை அனைவருமே பார்த்தனர். மீண்டும் நான் வடிவேலுவை பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.