மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தன்னுடைய அம்மாவின் பாணியிலேயே கதைக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மிக குறுகிய காலத்தில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகி பட்டியலில் இணைந்துள்ள ஜான்வி தொடர்ந்து, ஹீரோயின் சப்ஜெட் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருவதை பார்க்க முடிகிறது.
இதை தொடர்ந்து , மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீ-மேக்காக எடுக்கப்பட்ட மிலி படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திலும் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்ட பட்டது. இந்த படம் தமிழில் 'அன்புக்கினியால்' எங்கிற பெயரில் வெளியானது. இதில் நடிகை கீர்த்தி பாண்டியன் முதல் முறையாக தன்னுடைய தந்தையுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜான்வி கபூரை தமிழில் சில முன்னணி ஹீரோக்களுக்கு நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகவும், ஆனால் அவர் பாலிவுட் திரையுலகில் பிசியாக இருப்பதால், பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள வில்லை என கூறப்பட்ட நிலையில், ஜான்வியை ஒரு ஹீரோவிடம் வாய்ப்பு கேட்டுள்ளது தான் அனைவரது ஆச்சர்யத்திற்கும் காரணம்.
ஜான்வி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தை, 100 ஆவது முறையாக பார்த்து விட்டு, நடிகர் விஜய் சேதுபதிக்கு போன் செய்து... நான் உங்களின் தீவிர ரசிகை. உங்களுடைய படத்தில் ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் நான் ஆடிஷனில் கலந்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி மிகவும் ஐயோ என ஆச்சர்யப்பட்டு போயுள்ளார்.
2022 எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படு மோசமாக தோல்வியடைந்த திரைப்படங்கள்!
ஒரு வேலை இப்போது வெளியான இந்த தகவல் உண்மையானதாக இருந்தால், விரைவில்... ஜான்வி கபூர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.