தான் நடித்ததிலேயே சிறந்த படம் இதுதான்... எச்.வினோத்திடம் மனம்விட்டு சொன்ன அஜித் - அது எந்த படம் தெரியுமா?

Published : Dec 06, 2022, 02:59 PM IST

நடிகர் அஜித், தான் நடித்த படங்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த மற்றும் சிறந்த படம் எது என்பதையும் எச்.வினோத்திடம் கூறினாராம். 

PREV
15
தான் நடித்ததிலேயே சிறந்த படம் இதுதான்... எச்.வினோத்திடம் மனம்விட்டு சொன்ன அஜித் - அது எந்த படம் தெரியுமா?

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், பிக்பாஸ் பிரபலங்கள் அமீர், பாவனி, சிபி, சமுத்திரகனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வலிமை படத்தைப் போல் இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடி இல்லையாம்.

25

துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்காக இவர் இசையமைத்துள்ள சில்லா சில்லா என்கிற பாடல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்பாடல் அனிருத் பாடி உள்ளார். இதுதவிர துணிவு படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவர உள்ளன. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் வினோத் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

35

அதன்படி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் துணிவு படத்தில் நடிகர் அஜித் கதையே கேட்காமல் நடித்ததாக கூறிய வினோத், முதலில் இப்படத்தின் ஒரு சீனை சொல்லி தான் அஜித்திடம் ஓகே வாங்கியதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அஜித்துக்கு மிகவும் பிடித்த அந்த சீன் படத்தில் இடம்பெறவில்லை எனக்கூறினார்.

இதையும் படியுங்கள்... தப்பான முறையில் தொட்டவனை அடிச்சு ஓடவிட்டேன்... நிஜ வாழ்க்கையிலும் ‘கட்டா குஸ்தி’ செய்த ஐஸ்வர்யா லட்சுமி

45

அதுமட்டுமின்றி நடிகர் அஜித், தான் நடித்த படங்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த மற்றும் சிறந்த படம் எது என்பதையும் எச்.வினோத்திடம் கூறினாராம். அதன்படி அவர் தான் நடித்ததிலேயே சிறந்த படம் நேர்கொண்ட பார்வை தான் என்றும், அப்படத்தின் மூலம்  தான் தனது ரசிகர் வட்டம் பெரிதானதாகவும் கூறினாராம். அந்த படத்தை இயக்கியதும் எச்.வினோத் தான்.

55

கடந்த 2019-ம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித் வக்கீலாக நடித்திருந்தார். இது இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மானபங்கப்படுத்தியதாக பரபரப்பு புகார் அளித்த பார்வதி நாயர்... இளைஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் பாய்ந்தது வழக்கு

click me!

Recommended Stories