விஜய் டிவி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது பல்வேறு திருப்புமுனைகளுக்கு மத்தியில், பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் குறித்து மிகவும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அம்மாவை இழந்த கண்ணம்மா, சித்தியின் கொடுமையில் வளர்கிறார். தான் பெற்ற மகளை மஹாராணி போலவும், கண்ணம்மாவை வேலை காரியாகவும் அவரது சித்தி பார்த்தாலும், கண்ணம்மாவின் வாழ்க்கையில் ஒரே ஆறுதல் என்றால் அது, அவருடைய அப்பா தான்.
கண்ணம்மாவின் வாழ்க்கையை சீரழிக்க அவருடைய சித்தி திட்டம் போட்டாலும், அதனை அறிந்து கொள்ளும் பாரதி, கண்ணம்மாவை காதலித்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் பாரதியின் அம்மா இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பின்னர் கண்ணம்மாவின் உண்மையான குணம் குறித்து தெரிய வந்ததும், கண்ணம்மாவை மாமியார் ஏற்றுக்கொள்கிறார். கண்ணம்மா கர்ப்பம் தரித்த செய்தி தெரியவரவே தனக்கு ஆண்மை இல்லை என நினைத்து கொண்டிருக்கும் பாரதிக்குள் சந்தேகமும் குடி கொள்கிறது.
Shruti Haasan: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!
பாரதியை அடைய வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும், அவரது தோழி வெண்பா... கண்ணம்மா தவறானவள் என்கிற எண்ணத்தை பாரதி மனதிற்குள் புகுத்தி, பாரதியை கண்ணம்மாவுக்கு எதிராக திருப்புகிறார். காதலித்து, திருமணம் செய்து கொண்ட கணவனே தன்னை தவறானவள் என நினைத்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல், வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா கையில் பையுடன்... பல மையில் தூரம் நடந்தே சென்றது அனைவரும் அறிந்தது தான்.
ஒருவழியாக கண்ணம்மா இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க, ஒரு குழந்தை பாரதியிடம் வந்து சேர்கிறது. இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடம் இருக்கிறது. இரண்டு குழந்தைகளும் தற்போது கண்ணம்மாவிடம் இருக்கும் நிலையில், ஒரு வழியாக மனம் மாறி கண்ணம்மா கெட்டவள் என்பதை நிரூபிப்பதற்காக பாரதி, DNA டெஸ்ட் எடுத்து, அதனை டெல்லிக்கே சென்று வாங்குகிறார். அப்போது லட்சுமி மற்றும் ஹேமா ஆகோயோர் தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகிறது.
தப்பான முறையில் தொட்டவனை அடிச்சு ஓடவிட்டேன்... நிஜ வாழ்க்கையிலும் ‘கட்டா குஸ்தி’ செய்த ஐஸ்வர்யா லட்சுமி
எனவே கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைக்கும் பாரதி வாழ்க்கையில் மீண்டும் ஒரு பிரச்னையை கிளப்பியுள்ளார். பாரதி கண்ணம்மாவிடம் வந்து சேர்ந்து வாழலாம் என கூற, இடையில் வரும் பாரதி இந்த DNA ரிப்போர்ட்டில் பிரச்சனை இருக்கிறது என்றும், உனக்கு ஏற்கனவே... இரண்டு முறை பெர்டிலிட்டி ஈஸ்ட் எடுத்த போது, குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பே இல்லை என ரிப்போர்ட் வந்தது. அப்படி இருக்க இந்த இரு குழந்தையும் உனக்கு பிறந்ததாக இருக்கும் என கேட்கிறார்.