மலையாள திரையுலகில் இருந்து தமிழ்நாட்டில் நடிக்க வரும் நடிகைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில் விஷாலின் ஆக்ஷன் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த இவருக்கு, முதல் இரண்டு படங்கள் சொதப்பினாலும், அடுத்ததாக இவர் நடித்த படங்களெல்லாம் வேறலெவல் வெற்றி பெற்றன.
இதையடுத்து இவர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கட்டா குஸ்தி படத்தில் நடித்தார். இப்படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து அசத்தி உள்ளார். படத்தில் ஹீரோவை மிஞ்சும் அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் ரவுடிகளை அடிச்சு துவம்சம் செய்து அதகளம் செய்துள்ளார் ஐஸ்வர்யா. இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் குஸ்தி வீராங்கனையாக நடித்தது தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவித்த ஐஸ்வர்யா லட்சுமி, தன் நிஜ வாழ்க்கையில் நடந்த கட்டா குஸ்தி அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அதன்படி தன்னை தப்பான முறையில் தொட்டவனை அடித்ததாக கூறிய ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் அதுபோன்ற கசப்பான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என கூறினார்.
இதையும் படியுங்கள்... Shruti Haasan: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!