பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவானி. அதில் ஆரம்பத்தில் கொழுகொழுவென இருந்த அவருக்கு சைடு ரோல் கொடுக்கப்பட்டு வந்தது. பின்னர் உடல் எடையை சட்டென குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறியதால் அந்த சீரியலிலேயே ஹீரோயினாக புரமோட் ஆனார். அந்த சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்பு குவிந்தது. அதன்படி முதலில் விக்ரம் படத்தில் நடித்த இவர், அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல வீசேஷம், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்தார். அடுத்த வாரம் ரிலீசாக உள்ள வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறார் ஷிவானி.