பழசுக்கு வந்த திடீர் மவுசு... ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்வதற்காக பழைய படத்தை தூசி தட்டி எடுக்கும் அஜித்?

Published : Dec 07, 2022, 07:40 AM IST

ரஜினியின் பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் ஒருபக்கம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக அஜித்தின் பழைய படம் ஒன்றும் ரீ-ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
பழசுக்கு வந்த திடீர் மவுசு... ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்வதற்காக பழைய படத்தை தூசி தட்டி எடுக்கும் அஜித்?

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரீ-ரிலீஸின் போது அமோக வரவேற்பை பெற்றன. தற்போது ரஜினி நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான பாபா திரைப்படம் ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

24

ரஜினியின் சொந்த தயாரிப்பில் வெளியான இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இப்படம் ரிலீசான சமயத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாக இது அமைந்து இருந்தது. ஏனெனில் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியது ரஜினி தான். தற்போது அப்படத்தை நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... அமீரின் 'உயிர் தமிழுக்கு' படத்தை வெளியிடும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

34

சமீபத்தில் இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டது. அதில் உடனடியாக டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்ததால், கூடுதல் காட்சிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இப்படத்தை ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தற்போது இதே பார்முலாவை நடிகர் அஜித்தும் பின்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசாகி படுதோல்வி அடைந்த ஆழ்வார் படத்தை தான் தற்போது ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கட்டா குஸ்தி திரைப்படத்தை இயக்கிய செல்லா அய்யாவு தான் ஆழ்வார் படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... என் மகனுக்கு பிடித்த பெண்ணை இவர் தான் தேர்வு செய்யணும்? சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர் பேட்டி!

Read more Photos on
click me!

Recommended Stories