படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கி... சர்தார் படத்தின் வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய கார்த்தி

Published : Dec 07, 2022, 10:11 AM IST

சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி, அதில் படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றையும் வழங்கி உள்ளார்.

PREV
14
படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கி... சர்தார் படத்தின் வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய கார்த்தி

நடிகர் கார்த்தியின் கெரியரில் மறக்க முடியாத ஆண்டாக 2022 அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கிடைத்ததால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் கார்த்தி. 

24

இந்த மூன்று படங்களில் பொன்னியின் செல்வன் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும், அது கார்த்தி சோலோ ஹீரோவாக நடித்த படமில்லை. அப்படி அவர் சோலா ஹீரோவாக நடித்த சர்தார் படம் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக இருந்தது.

34

பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் இந்த வருட தீபாவளி ரேஸில் சர்தார் படம் அமோக வெற்றியை பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதையும் படியுங்கள்... பட விழாவுக்கு படு கிளாமராக வந்த தமன்னாவை டேட்டிங் செல்ல அழைத்து அதிர்ச்சி கொடுத்த பிரபல ஹீரோ

44

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார் கார்த்தி. அதில் படக்குழுவினரும் அவர் அளித்த கிஃப்ட் தான் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாக உள்ளது. சர்தார் படம் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரால் வரும் ஆபத்துகளை பற்றி பேசி இருந்தது. இதன் காரணமாகவே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்த்து கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை வழங்கி இருந்தனர்.

தற்போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை பரிசாக வழங்கி உள்ளார் கார்த்தி. அதில் என்ன ஸ்பெஷல் என்றால் அந்த பாட்டில் வெள்ளியால் ஆனதாம். கார்த்தி அளித்த இந்த விலையுயர்ந்த பரிசின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன. கார்த்தியின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... அஜித் வரலேனா என்ன.. நாங்க இருக்கோம்! உள்ளூர் முதல் உலகக்கோப்பை வரை ‘துணிவு’டன் இறங்கி புரமோட் செய்யும் ரசிகாஸ்

Read more Photos on
click me!

Recommended Stories