கொலை மிரட்டல் புகார்... நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்

Published : Dec 07, 2022, 11:54 AM IST

பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

PREV
14
கொலை மிரட்டல் புகார்... நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்

நடிகை பார்வதி நாயர் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், கடந்த அக்டோபர் மாதம், தனது வீட்டில் இருந்த விலையுயர்ந்த கைகடிகாரங்கள், லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை திருடுபோனதாக போலீஸில் பரபரப்பு புகார் அளித்தார்.

24

அதுமட்டுமின்றி தன் வீட்டில் வேலைபார்த்து வந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் தான் இதையெல்லாம் திருடிவிட்டதாகவும் அந்த புகார் மனுவில் பார்வதி குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து பார்வதி கூறுவதெல்லாம் பொய் என்று கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுபாஸ் சந்திரபோஸ், புகார் ஒன்றை அளித்திருந்தார். இவ்வாறு இருவரும் மாறி மாறி புகார் அளித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... என் கணவன் ஒரு சைக்கோ... அவரால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம் - கண்கலங்கிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி

34

இதனிடையே கடந்த மாதம் சுபாஷ் சந்திரபோஸ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்திருந்தார். இதையடுத்து நேற்று பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

44

இந்நிலையில், இன்று பார்வதி நாயர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளரான சுபாஷை போலீசார் கைது செய்துள்ளனர். பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார், இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கி... சர்தார் படத்தின் வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய கார்த்தி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories