தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்த பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. குறிப்பாக தமிழில் இவர் முண்டாசுக் கவிஞன், பாரதியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பாரதியாராக நடித்த தமிழக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மேலும் பாரதியாரின் கதாபாத்திரத்தை தத்ரூபமாக கண் முன் நிறுத்தினார் என இவரை பலர் பாராட்டினர்.
பாரதி படத்திற்கு பின், தமிழில் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில், அஜித் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்', ரஜினிகாந்த் நடித்த 'பாபா' விக்ரமுடன் 'தூள்', தனுஷுடன் 'படிக்காதவன்', விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' போன்ற போன்ற பல படங்களில் நடித்துள்ளார் சாயாஜி ஷிண்டே. இந்நிலையில் இவர் மீது தற்போது இயக்குனர் சச்சின் என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என் மகனுக்கு பிடித்த பெண்ணை இவர் தான் தேர்வு செய்யணும்? சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர் பேட்டி!
இயக்குனர் சச்சின் எடுக்க இருந்த படத்தில், சாயாஜி ஷிண்டே.. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக 5 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னர் இதற்கான முழு தொகையும் அவரிடம் கொடுக்கப்பட்ட நிலையில், திடீர் என சாயாஜி ஷிண்டே திரைக்கதையில் தன்னுடைய கதாபாத்திரத்தை மாற்றக் கோரி இயக்குனர் சச்சினிடம் கூறியுள்ளார்.
அப்படி இல்லை என்றால் இந்த படத்தை விட்டு விலகுவதாகவும், இந்த படத்திற்காக பெற்ற 5 லட்சம் ரூபாயை திருப்பி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சச்சின் வேறு ஒரு நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சாயாஜி ஷிண்டே இந்த படத்திற்காக பெற்ற ஐந்து லட்ச ரூபாயை திருப்பி தருவதாக கூறியும் கொடுக்கவில்லை. பல முறை அவரை அணுகி 5 லட்சம் ரூபாயை கொடுக்க சொல்லி கேட்டும் கொடுக்காததால், தற்போது காவல் நிலையத்தை நாடியுள்ளார் சச்சின்.
அடிதூள்... சொந்த ஊரில் மிக பிரமாண்டமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த விஜய் டிவி ராமர்! வைரலாகும் போட்டோஸ்!