
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள `புஷ்பா 2: தி ரூல்` திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நேற்று (புதன்கிழமை) இரவு இந்த படத்தின் முதல் பிரீமியர் காட்சிகள் வெளியிடப்பட்டன. புஷ்பா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்கள் மற்றும் மாஸ் ஆடியன்ஸை பெரிதும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் டிக்கெட் புக்கிங்கிலேயே சாதனை செய்த புஷ்பா திரையரங்கிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அதே நேரம் 'புஷ்பா 2' படத்தில் கதைக்களத்தில் சில குறைகள் இருப்பதாக ரசிகர்கள் கூறினாலும், அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட நடிப்பு, அதிரடி ஆக்ஷன் காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள், சுகுமாரின் இயக்கம், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மற்றும் பாடல்கள் முன் இப்படத்தில் மைனஸ் மங்கிவிட்டதாகவே தெரிவிக்கின்றனர்.
`புஷ்பா 2` உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டை ஆடும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். முதல் பாகத்தில் எப்படி அல்லு அர்ஜுனுக்கு, தேசிய விருது கிடைத்ததோ... அதே போல் மீண்டும் ஒருமுறை 'புஷ்பா 2' படத்திற்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சரி புஷ்பா 2 படத்தின் 5 ஹை லைட்ஸ் பற்றி பார்ப்போம்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமண பத்திரிக்கை லீக் ஆனது!
முதலாவது , இயக்குனர் சுகுமார் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தின் காட்சிகள் மற்றும் ஆக்டின் காட்சிகளை சிறப்பாக செதுக்கி உள்ளார். குறிப்பாக ஜாத்ரா எபிசோட், கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் வேற லெவலில் உள்ளன. படத்தில் மொத்தம் ஐந்து முக்கிய சண்டைகள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் சண்டை காட்சிகள் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
இரண்டாவது, இப்படத்தில் உள்ள ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ். எப்போதுமே ஒரு படத்தை சிறப்பானதாக மாற்றுவது எதிர்பாராத நேரத்தில் படத்தில் இடம்பெறும் திருப்புமுனை காட்சிகள் தான். அந்த வகையில் 'புஷ்பா 2' படத்தில், ஆரம்பத்தில் அல்லு அர்ஜுனின் அறிமுகக் காட்சி, காவல் நிலையத்தில் புஷ்பா கொடுக்கும் அதிர்ச்சி, முதல்வரை மாற்ற ராவ் ரமேஷிடம் சொல்லும் காட்சிகள், இடைவேளையில் எஸ்பி ஷேகவத்திடம் சவால் விடும் காட்சி என அனைத்துமே கை தட்டல்களை குவிகிறது.
சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ! புது ஹீரோ யார் தெரியுமா?
மூன்றாவது, இந்த படத்தில் முக்கிய ஹைலைட் DSP-யின் இசை மற்றும் பாடல்கள் தான். அதே போல் சமந்தா இடத்தை ரீபிளேஸ் செய்து ஐட்டம் பாடலில் குதூகலம் செய்திருக்கும் ஸ்ரீ லீலா ஒருபுறம் இருக்க.. அவருக்கு போட்டியாக ராஷ்மிகாவுக்கும் இறங்கி குத்தியுள்ளார்.
நான்காவது, அல்லு அர்ஜுனின் நடிப்பு தான் இந்த படத்தின் மிகப்பெரிய ஹைலைட். அவரது கதாபாத்திர வடிவமைப்பும் அதற்க்கு ஏற்றாப்போல் இவர் நடித்துள்ளதும் வேற லெவலில் உள்ளது. அல்லு அர்ஜுன் புஷ்பாவாகவே வாழ்ந்து நடித்துள்ளார் என்றும், இதுவே அவருடைய கேரியரில் சிறப்பான படமாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தங்க ஜரி காஞ்சிபுர பட்டில் சோபிதா - வேஷ்டி சட்டையில் சைதன்யா; பாரம்பரிய உடையில் நடந்த திருமணம்!
ஐந்தாவது, குடும்ப சென்டிமென்ட் இந்த படத்தில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அல்லு அர்ஜுன் ஆடும் நடனம், இந்த சமயத்தில் ரஷ்மிகாவுடன் வரும் காட்சிகள் கண்ணீர் சிந்த வைக்கும். அதே நேரத்தில் அஜய்க்கு ரஷ்மிகா எதிர்த்து நிற்கும் காட்சிகள் அதே அளவுக்கு உணர்ச்சிவசப்பட வைக்கும். புஷ்பாவை அவமானப்படுத்தும் காட்சிகள் மனதை கிள்ளும் . கிளைமாக்ஸ் காட்சியும் நெஞ்சை உருக்கும். பொதுவாக கிளைமாக்ஸில் வில்லனை அழித்து கதை சுபமாக முடியும். ஆனால் இதில் கிளைமாக்ஸுக்கு முன்பே சண்டையை வைத்து, அதன் பிறகு குடும்ப சென்டிமென்ட் உடன் கிளைமாக்ஸை முடித்துள்ளார். இது ரசிகர்கள் எதிர்பாராத ஒரு திருப்பம் என்றே கூறலாம்.