Sun TV Serial
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள், இல்லத்தரசிகளின் மனதை அதிகம் கவர்ந்தவை. அதேபோல் குடும்பப் பின்னணியை கதைக்களமாக வைத்து, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சீரியல்களே சன் டிவியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
Tamil Serial
அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம், சன் டிவி தொலைக்காட்சிகள் துவங்கப்பட்ட புத்தம்புது சீரியல்தான் 'லட்சுமி', இந்த சீரியலை சாய் மருது என்பவர் இயக்கி வருகிறார்.100 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் சுருதி ராஜ் கதாநாயகியாக நடிக்க, சஞ்சீவ் வெங்கட் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் மீனா வெம்புரி, கீர்த்தி விஜய், மேகா மேனன், நித்யா ரவீந்திரன், செந்தில்நாதன், மகிமா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாருக்கு புற்றுநோய்; அமெரிக்காவில் தீவிர சிகிச்சை!
Sanjeev Quit Lakshmi Serial
இல்லத்தரசிகளின் மதிய நேர ஃபேவரிட் தொடரான இந்த சீரியல், திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மாமியார் வீட்டுக்கு வந்த பின்னரும் தன்னுடைய தங்கை மற்றும் அம்மாவை நல்ல படியாக வாழ வைக்க, மஹாலக்ஷ்மி எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.