
மறைந்த பழம்பெறும் கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான டாக்டர் ராஜ்குமாரின் மகன் தான் சிவ ராஜ்குமார். 62 வயதாகும் இவர், சென்னையில் பிறந்து வளர்த்தவர். அதே போல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் கவர்மெண்ட் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ட்ரைனிங் இன்ஸ்டியூட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு, பின்னர் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார்.
1974 ஆம் ஆண்டு, 'ஸ்ரீ சீனிவாச கல்யாணம்' என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு 'ஆனந்த்' என்கிற கன்னட திரைப்படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். முதல் திரைப்படத்திற்கே சிறந்த அறிமுக நாயகனுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வென்ற சிவ ராஜ்குமார் இதை தொடர்ந்து, தெலுங்கு திரைப்படங்களில் அதிரடி ஆக்சன் நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சிவராஜ்குமார் கடந்த சில வருடங்களாக, கன்னட திரையுலகில் மட்டும் இன்றி தென்னிந்திய திரைப்படங்களில் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அஜித்துடன் மோதல் உறுதி! அருண் விஜய்யின் 'வணங்கான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜெயிலர் திரைப்படத்தில், ரஜினிகாந்தின் நண்பராக நரசிம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார் சிவராஜ் குமார். அதே போல் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தளபதி 69 ஆவது படத்திலும் சிவ ராஜ்குமார் நடிக்க கமிட் ஆகி இருக்கும் தகவல் வெளியானது.
நடிகர் என்பதைத் தாண்டி, பாடகராகவும் பிரபலமான இவர் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தற்போது இவருடைய கைவசம் 6 படங்கள் உள்ளன. திரை உலகில் பிஸியாக நடித்து வரும் சிவ ராஜ்குமாருக்கு தற்போது புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், இதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
இந்த தகவல் குறித்து, சிவ ராஜ்குமார் ஏற்கனவே கூறியபோது... "தனக்கு ஒரு நோய் இருப்பது உண்மைதான். அதற்காக அமெரிக்கா சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுக்க உள்ளதும் உண்மைதான். ஆனால் அது புற்றுநோய் அல்ல. அந்த நோய் குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம். நான் நலமுடன் இந்தியா திரும்புவேன் என தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்ல உள்ளதால், சிவ ராஜ்குமார் நடிக்க கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சிவ சிவராஜ் குமாருக்கு புற்று நோய் உறுதி செய்யப்பட்டிருப்பது போல் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சிவ ராஜ்குமார் தன்னுடைய தந்தை வழியில் இருந்து வந்த சொத்துக்கள் அனைத்தையும், ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி வந்தாலும், இதுபற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவராஜ்குமாரின் சகோதரர் புனித் ராஜ்குமார் ஜிம்மில் உடல்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே... மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புனித் ராஜ்குமாரின் மரணத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வராத கன்னட ரசிகர்களுக்கு சிவ ராஜ்குமாரின் உடல்நிலை குறித்து வெளியாகி உள்ள தகவல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.