இந்தியாவில் நடிகர், நடிகைகள் கடவுளுக்கு நிகராக வைத்து கொண்டாடப்படுகின்றனர். தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் திரைப்படம் வெளியாகும்போதும், அவர்களின் பிறந்தநாளின்போதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
ரசிகர்களின் மனதில் கடவுளாக பார்க்கப்பட்டாலும் தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு சரியாக அமைவதில்லை. அண்மைகாலமாக திரையுலகில் அதிகரித்து இருக்கும் விவகாரத்தே இதற்கு சாட்சி. சில நடிகர், நடிகைகளின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்து விட்டாலும் அவர்கள் சோர்ந்து போகாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர்.
அப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபலமான சில நடிகைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
அதிதிராவ்
தமிழில் சைக்கோ, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அதிதிராவ். இவர் தனது 24வது வயதில் சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். அதிதிராவ் அண்மையில் நடிகர் சித்தார்த்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.