இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி பின்னர், பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படம் 'வணங்கான்'. திரைப்படத்தை மீண்டும் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து ஒருவழியாக இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பாலா. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
24
Arun Vijay and Bala Movie
அருண் விஜய்க்கு ஜோடியாக, ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இருந்தாவது நாயகியாக ரித்தா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தை தன்னுடைய குடும்பத்துடன் பார்த்த, நடிகர் அருண் விஜய் உருக்கமான வார்த்தைகளால், பாலாவுக்கு நன்றி கூறி இருந்தார்.
மேலும் இந்த படம் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், ரிலீஸ் தேதி அறிவிப்பும் வெளியாகவில்லை. அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் என்பதால், ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகாத படங்கள் பின் வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அஜித்துடனான மோதலை அருண் விஜய்யின் 'வணங்கான்' உறுதி செய்துள்ளது. சற்று முன் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, 'வணங்கான்' திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக, வரும் ஜன-10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
44
Vanangaan and Vidamuyarchi Release in Pongal
இயக்குனர் பாலா இயக்கத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். இயக்குனர் பாலா இந்த படத்தின் மூலம் தன்னுடைய தரமான கம்பேக்கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், படம் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு கூடியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.