Published : Dec 05, 2024, 10:58 AM ISTUpdated : Dec 05, 2024, 11:57 AM IST
ஏராளமான ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக வலம் வந்த, இந்த நடிகை, தமிழில் 11 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அணைத்து படங்களும் ஹிட் படங்களாக அமைந்தது. இவர் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலையாள திரை உலகில் இருந்து, ஏராளமான நடிகைகள் தமிழுக்கு படை எடுத்து வந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக மாறுகின்றனர். அந்த வகையில் நயன்தாராவுக்கு முன்பே ரசிகர்கள் மனதை தன் வசப்படுத்தியவர் தான் நடிகை அசின். தன்னுடைய 15 வயதில், 2001 ஆம் ஆண்டு வெளியான மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், அதன் பின்னர் தெலுங்கு திரைப்பட வாய்ப்பை கைப்பற்றினார்.
26
Asin Rare Photo
தெலுங்கில் இவர் அறிமுகமான முதல் படமான 'அம்மா நானா ஓ தமிழா அம்மாயி' என்கிற படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரவி தேஜா ஹீரோவாக நடிக்க, அசின் ஹீரோயினாக நடித்திருந்தார். பூரி ஜெகநாதன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை, தன்னுடைய தம்பி ஜெயம் ரவியை வைத்து இயக்குனர் மோகன் ராஜா, கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்கிற பெயரில் ரீமேக் செய்தார்.
இந்த படத்தில் நடிகை அசினையே கதாநாயகியாக நடிக்க வைத்தார். மேலும் இவருடைய எதார்த்தமான நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் தமிழில் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக மாறிய அசின், இதைத்தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், காவலன், என எண்ணி 11 படங்களில் மட்டுமே நடித்தார்.
46
Asin Dance Performance
இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. கடைசியாக 'காவலன்' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அசின். அதன் பின்னர் ஹிந்தி திரையுலகில் பக்கம் சென்றார். ஹிந்தியில் கஜினி ரீமேக்கில் நடித்து ஹிட் கொடுத்த இவருக்கு, அடுத்தடுத்து பல பாலிவுட் படங்கள் வரிசை கட்டி நின்றது.
திருமணத்திற்கு பின்பு திரை உலகை விட்டு மொத்தமாக ஒதுங்கிய அசினுக்கு 2017 ஆம் ஆண்டு ஆரின் என்கிற மகள் ஒருவர் பிறந்தார். அவ்வபோது தன்னுடைய மகளின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் அசின், கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேலாக திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.
66
Asin With Husband Rahul
அக்டோபர் 26, 1985 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் மலையாள கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த அசினின் தந்தை ஜோசப் தொட்டுமாங்கள் முன்னாள் சிபிஐ அதிகாரி. தன்னுடைய பள்ளி காலங்களிலேயே மாடலிங் துறையில் கவனம் செலுத்திய அசின் 15 வயதிலேயே நடிகையாக மாறினார். நடிப்பில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து... கல்லூரியிலும் BA ஆங்கிலத்தை தேர்வு செய்து நடித்து பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.