
Sreeleela Waiting For Pushpa 2 The Rule Hit : புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீலீலா நடித்த படங்கள் தோல்வி கொடுக்க இந்தப் படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்பதை பார்க்கலாம். அமெரிக்காவின் மிச்சிகனில் 14 ஜூன் 2001ல் பிறந்தவர் நடிகை ஸ்ரீலீலா. தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இவரது அம்மா ஸ்வர்ணலதா பெங்களூருவில் மகளிர் மருத்துவ நிபுணராக இருக்கிறார். பிரபல தொழிலதிபரான சூரபனேனி சுபாகரா ராவை மணந்த ஸ்வர்ணலதா கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்தார். அதன் பிறகு தான் ஸ்ரீலீலா பிறந்துள்ளார்.
பரதநாட்டியத்தில் மீது ஆர்வம் கொண்டு குழந்தையாக இருக்கும் போதே அதனை கற்றுக் கொண்டுள்ளார். டாக்டராக வேண்டும் என்ற ஆசையோடு இருந்த ஸ்ரீலீலா 2021 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.
படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்களில் ஸ்ரீலீலாவும் ஒருவர். சித்ராங்கதா என்ற தெலுங்கு படத்தில் இளம் வயது ஷாலினி தேவியாக நடித்திருந்தார். ஹீரோயினாக நடித்த முதல் படத்திற்கே சிறந்த நடிகைக்கான சைமா விருது வென்று ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த படம் தான் கிஸ்.
அடுத்ததாக பாரதே என்ற படத்தில் நடித்தார். இதே போன்று தெலுங்கில் நடித்த பெல்லி சண்டா டி என்ற படத்திற்காக சிறந்த நம்பிக்கைக்குரிய புதுமுகம் என்பற்காக சைமா விருது வென்றார். 3ஆவதாக தமாகா படத்திற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருது வென்றார். இப்படி அடுத்தடுத்து சைமா விருது வென்ற நடிகை என்ற சாதனையை இளம் வயதிலேயே ஸ்ரீலீலா படைத்தார்.
ஆனால், கடைசியாக இவரது நடிப்பில் வந்த எந்தப் படமும் வசூல் ரீதியாக ஹிட் கொடுக்கவில்லை. விமர்சன ரீதியாக ஸ்ரீலீலா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். டான்ஸிலும் கலக்கு கலக்குன்னு கலக்கினார். தெலுங்கு சினிமாவில் இப்படியொரு டான்ஸ் சூறாவளி யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னை ஒவ்வொரு படத்திற்கும் மெருகேற்றி வருகிறார்.
கடைசி ஒரு சில ஆண்டுகளில் தெலுங்கில் மாஸ் ஹீரோக்களுடன் இணைந்த நடித்த படங்கள் போதுமான வரவேற்பு கொடுக்கவில்லை. அப்படி அவர் நடிச்சு வெளியான படம் குண்டூர் காரம். மகேஷ் பாபு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி. ஆனால், வசூலோ ரூ.172 கோடி. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த குர்ச்சி மடதபெட்டி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. ரிலீஸாகும் வைரலானது.
அந்தளவிற்கு ஸ்ரீலீலா டான்ஸ் ஆடி அசத்தியிருந்தார். 2023ல் வெளியான பகவந்த் கேசரி படமும் பெரியளவில் வரவேற்பு இல்லை. இந்தப் படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படமும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடைசியாக இவர் ஸ்கந்தா, Extra Ordinary Man ஆகிய படங்களுமே வசூல் ரீதியாக மோசமான வரவேற்பை பெறவே இப்போது ஐட்டம் சாங்கிற்கு மட்டுமே புஷ்பா 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இந்தப் பாடல் கொடுக்கும் வரவேற்பை வைத்து அடுத்தடுத்து சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 23 வயதான ஸ்ரீலீலா விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குறைவான காலகட்டத்தில் அதிக படங்களில் நடித்து தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். இதே போன்று தான் ஆரம்பத்தில் நயன்தாராவும் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஸ்ரீலீலாவை நயன்தாராவுடன் தான் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். அவர் நயன் தாராவைப் போன்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான வாய்ப்புகள் அவருக்கு நிறையவே இருக்கிறது.