ஆதிபுருஷுக்கு தடை போடுங்க; இப்படி ஒரு படத்தை எடுத்த டைரக்டரை தூக்கி ஜெயில்ல போடுங்க - பிரதமருக்கு பறந்த கடிதம்

Published : Jun 20, 2023, 03:00 PM IST

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளதால் ஆதிபுருஷ் படத்துக்கு தடை விதிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

PREV
14
ஆதிபுருஷுக்கு தடை போடுங்க; இப்படி ஒரு படத்தை எடுத்த டைரக்டரை தூக்கி ஜெயில்ல போடுங்க - பிரதமருக்கு பறந்த கடிதம்
Adipurush

பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ். பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் கடந்த ஜூன் 16-ந் தேதி திரைக்கு வந்தது.

24
Adipurush

ரிலீஸ் ஆன முதல் நாளே நெகடிவ் விமர்சனங்களை சந்தித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகின்றது. முதல் நாளில் ரூ. 140 கோடி வசூலித்த இப்படம், அடுத்த இரண்டு நாட்களில் தலா ரூ.100 கோடி வீதம் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் முதல் வார இறுதியில் இப்படம் ரூ. 340 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் இப்படத்தின் 4-ம் நாள் வசூல் அதள பாதாளத்திற்கு சென்றது. இதனால் இப்படம் படுதோல்வியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விஜய் தலையில விக் இருக்கானு பார்க்காதீங்க... சரக்கு இருக்கான்னு பாருங்க! தளபதி பற்றி பிரபலம் சொன்ன ஷாக் தகவல்

34
PM Modi

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்திற்கு தடைவிதிக்கக்கோரி அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், “ஆதிபுருஷ் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் ஆகியவை இந்துக்களின் மத உணர்வையும் சனாதன தர்மத்தையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராமன் மற்றும் ராவணன் கதாபாத்திரங்கள் வீடியோ கேமில் வரும் பொம்மை போல் காட்டப்பட்டுள்ளன.

44
Adipurush

அதுமட்டுமின்றி இப்படத்தின் வசனங்களும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் இப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். அதோடு இப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத், எழுத்தாளர் மனோஜ் சுக்லா மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ள வேண்டும். ஆதிபுருஷ் திரைப்படம் ஒரு டிசாஸ்டர் என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... மகளுக்கு விரைவில் திருமணம்! 2-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி.. பட் இது தான் பிரச்சனை? ரோபோ ஷங்கர் ஓபன் டாக்!

Read more Photos on
click me!

Recommended Stories