அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “விஜய்யின் சமீபத்திய நகர்வுகள் மூலம் அவர் அரசியலுக்கு நுழைய தயாராகிவிட்டார் என்பது தெரிகிறது. அது தப்பில்ல, நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல.