நடிகர் விஜய்யின் 67-வது திரைப்படம் லியோ. மாஸ்டர் படத்திற்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். லியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
24
Vijay, Trisha
லியோ படத்தின் ஷூட்டிங்கே முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டாலும் இப்படத்தில் இணையும் நடிகர்கள் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே தான் செல்கிறது. ஏற்கனவே லியோ படத்தில் கவுதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், நடிகை பிரியா வாரியர், மடோனா செபஸ்டியன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, பிக்பாஸ் பிரபலம் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த நிலையில், லியோ படத்தில் புது வரவாக நகைச்சுவை நடிகர் வையாபுரி இணைந்துள்ளாராம். இதன்மூலம் 14 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளாராம் வையாபுரி. இவர்கள் இருவரும் கடைசியாக பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதன்பின் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், லியோ மூலம் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளனர்.
44
Vijay
லியோ படத்தில் நடித்துள்ளதை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்த வையாபுரி, இந்த வாய்ப்பு கிடைக்க கமல் தான் காரணம் என கூறி உள்ளார். விக்ரம் படத்தின் போதே வையாபுரிக்கு சின்ன ரோல் கொடுக்குமாறு லோகேஷிடம் கமல் சொன்னாராம். அப்படத்தில் அவரை நடிக்க வைக்காமல் போன நிலையில், தற்போது லியோ படத்திற்காக அவரே அழைத்து நடிக்க வைத்தாராம். இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும் என வையாபுரி கூறி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.