Priya Prakash Varrier
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படம் ரிலீசாகும் முன்னர், அப்படத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் நடிகை பிரியா வாரியர் கண் அடிப்பது மிகவும் வைரல் ஆனது.
Priya Prakash Varrier
இதனால் ஒரே நாள் இரவில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட நடிகை ஆனார் பிரியா வாரியர். இதையடுத்து ரசிகர்கள் அவரை கண்ணழகி என செல்லமாக அழைக்கத் தொடங்கினர். கண்ணடிக்கும் வீடியோ வைரலனதால், பிரியா வாரியரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
Priya Prakash Varrier
இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் பிரியா வாரியர்.
Priya Prakash varrier
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற கவர்ச்சி உடை அணிந்து விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்தபோது எடுக்கப்பட்ட டாப் ஆங்கிள் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.