விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ரோபோ ஷங்கர், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் நடன திறமையையும் வெளிப்படுத்தினார். பின்னர் மாரி படத்தின் மூலம் மெயின் காமெடி ரோலில் தனுஷுடன் நடித்து அசத்திய ரோபோ ஷங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் அவருக்கு நண்பனாகவும் நடித்திருந்தார்.