ஆலியா பட்
பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு இந்த ஆண்டு ஸ்பெஷலான ஒன்றாகவே அமைந்துள்ளது. அவருக்கு திருமணம் ஆனதும் இந்த ஆண்டு தான், குழந்தை பிறந்ததும் இந்த ஆண்டு தான். அதேபோல் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளியதும் அவர் நடித்த படங்கள் தான். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். பிரம்மாஸ்திரா, கங்குபாய் கத்தியவாடி, டார்லிங்ஸ் ஆகிய படங்கள் வெற்றிபெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸ் குயின் லிஸ்ட்டில் ஆலியா பட் தான் முதலிடம் பிடித்துள்ளார்.
ஸ்ரீநிதி ஷெட்டி
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இளம் நடிகையாக இருந்தாலும் அவர் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் அவரை இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்க வைத்துள்ளது. இதுதவிர அவர் விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்திருக்கிறார். அப்படம் தோல்வி படமாக இருந்தாலும் கேஜிஎஃப் 2 அவருக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய்
நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் நான்காம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஏனெனில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்திருந்தார்.