தமிழ் - தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான, நடிகை காஜல் அகர்வால், கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான... கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதே போல்... திருமணம் முடிந்து ஹனி மூனுக்காக மாலத்தீவுக்கு சென்ற காஜல், அங்கு விதவிதமாக போட்டோ ஷூட் செஷ்ஷன் ஒன்றை நடத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.
குழந்தை பெற்ற 6 மாதத்திலேயே மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ள காஜல், அவ்வப்போது குழந்தையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை மட்டும் இன்றி, விதவிதமான போட்டோ ஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது... வெள்ளை நிறத்தில் பளபளவென ஜொலிக்கும் உடையில்... அழகில் தக தகவென தங்கமாய் ஜொலிக்கும் சில புகைப்படங்களை இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.