Ajith Kumar Says “Shalini’s Sacrifices Made My Success Possible” தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழா, கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. அதில் அஜித்குமார் உள்பட இந்த ஆண்டு பத்ம விருதுகள் வென்ற 139 பேருக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
24
குடியரசு தலைவர் கையால் பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித்
அஜித்துக்கு பத்ம பூஷன் விருது
நடிகர் அஜித்குமாருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கினார். இந்த விழாவில் கோர்ட் சூட் அணிந்து செம ஸ்டைலிஷாக வந்து கலந்துகொண்ட அஜித், தன் பெயர் அறிவிக்கப்பட்டது, நேராக எழுந்து சென்று பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லிவிட்டு, குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார். அப்போது அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
34
பத்ம பூஷன் விருதுடன் அஜித்
சென்னையில் அஜித்துக்கு உற்சாக வரவேற்பு
பத்ம பூஷன் விருது வென்ற கையோடு சென்னை திரும்பிய நடிகர் அஜித்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அஜித், அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, விரைவில் சந்திக்கிறேன் என கூறிவிட்டுச் சென்றார். அதேபோல் நடிகை ஷாலினியும் அஜித் பத்ம பூஷன் விருது வாங்கி இருப்பது மிகவும் பெருமையாக இருப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன் மனைவி ஷாலினி குறித்து அஜித் பேசியது இணையத்தில் வைரலாகிறது.
அதன்படி, என்னை திருமணம் செய்வதற்கு முன் ஷாலினி மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். ரசிகர்களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் திருமணத்திற்கு பின்னர் எனக்காக சினிமாவை விட்டு விலகினார். அது சாதாரண விஷயமே இல்லை. சில சமயங்களில் நான் தவறான முடிவை எடுத்துவிட்டால், அப்போது கூட எனக்கு உறுதுணையாக இருப்பார். இந்த விருதும், அதற்கு கிடைக்கும் பாராட்டுக்களும் முழுமையாக அவரையே சேரும் என அஜித் கூறி இருப்பதை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு மனைவி கிடைக்க அஜித் கொடுத்துவச்சிருக்கனும் என கூறி வருகின்றனர்.