தங்க நிற சிலையுடன் சமந்தாவுக்கு கோவில் கட்டி பிறந்தநாளை ஜோராக கொண்டாடிய ரசிகர்!

Published : Apr 30, 2025, 08:58 AM IST

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, ஏப்ரல் 28ந் தேதி அன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். 

PREV
14
தங்க நிற சிலையுடன் சமந்தாவுக்கு கோவில் கட்டி பிறந்தநாளை ஜோராக கொண்டாடிய ரசிகர்!

Samantha Ruth Prabhu Temple : விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சமந்தா, 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தப் பயணத்தில் காதல், திருமணம், விவாகரத்து, உடல்நலக் குறைவு என பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சமந்தா, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 'தூக்குடு', 'பிருந்தாவனம்', 'தெறி', 'மெர்சல்', 'கத்தி', '24', 'ரங்கஸ்தலம்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

24
சமந்தா கோவில்

சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

திரைப்பிரபலங்களை ரசிகர்கள் கடவுளாக வழிபடுவதுண்டு. நடிகைகளுக்கு கோயில் கட்டிய சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். குஷ்பு, ஹன்சிகா, நிதி அகர்வால் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில்கள் கட்டியுள்ளனர். தற்போது, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பாபட்லாவில் சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்காக கோயில் கட்டியுள்ளார். இந்தக் கோயில் 2023ஆம் ஆண்டே கட்டப்பட்டது. அந்த ஆண்டு சமந்தாவின் பிறந்தநாளன்று கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.

34
சமந்தா கோவிலில் பிறந்தநாள் கொண்டாட்டம்

சமந்தாவுக்கு தங்க நிற சிலை

இந்நிலையில், இந்த ஆண்டு சமந்தாவின் பிறந்தநாளான்று, அந்தக் கோயிலில் அவரது தங்க நிற சிலையை நிறுவியுள்ளார் அந்த ரசிகர். சிலைக்கு பூஜைகள் செய்து, கேக் வெட்டி சமந்தாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவும் வழங்கியுள்ளார். சமந்தா சிறந்த நடிகை மட்டுமல்ல, சமூக சேவையும் செய்பவர் என்பதால் தான் அவருக்கு ரசிகரானேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

44
சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

சமந்தா கைவசம் உள்ள படங்கள்

நடிகை சமந்தா கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி உள்ளார். அவர் தற்போது பங்காரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அவர் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி உள்ளார். அந்நிறுவனம் மூலம் அவர் தயாரித்துள்ள முதல் திரைப்படம் சுபம். அப்படத்தின் புதுமுகங்கள் நடித்துள்ளனர். அப்படம் வருகிற மே மாதம் 9-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories