Published : Apr 29, 2025, 08:04 PM ISTUpdated : Apr 29, 2025, 08:06 PM IST
பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், திருமணமான பின்னும் கூட சில நடிகைகள் மற்றும் பெண்களுடன் தொடர்பில் இருந்து சர்ச்சையில் சிக்கி உள்ளனர். அவர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ரகசிய காதல் பற்றி பேசும்போது, பாலிவுட்டின் கிலாடி என அழைக்கப்படும் நடிகர் அக்ஷய் குமாரின் பெயர் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. அக்ஷய் குமார் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. அதாவது பிரியங்காவுடன் 'அந்தாஸ்' மற்றும் 'ஐத்ராஸ்' படங்களில் பணியாற்றிய போது தான் இந்த காதல் கிசு கிசு பாலிவுட் திரையுலகில் கொழுந்து விட்டு எரிந்தது. இது அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணாவுக்குத் தெரியவந்ததும், அவர் மிகவும் கோவம் அடைந்து வீட்டுக்குள் பிரச்சனை வெடிக்க துவங்கியது. இதன் பின்னர் அக்ஷய் குமார் பிரியங்கா சோப்ராவுடன் உறவை முறித்து கொண்டார்.
27
கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி:
'ஹத்கர் தி ஆப்னே' படத்தில் பணியாற்றும் போது நடிகர் கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி நெருக்கமானார்கள் என்ற வதந்தி பரவியது. கோவிந்தா, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக ராணிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார். மேலும் பல்வேறு இயக்குனர்களின் படங்களில் டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை ராணிக்கு முகார்ஜுக்கு பெற்றுத் தந்தார். ஒரு கட்டத்தில் இது அவரது திருமண வாழ்க்கையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவிந்தாவின் மனைவி சுனிதா வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அப்போது கோவிந்தா தனது குடும்பம் தான் முக்கியம் என முடிவு செய்து, ராணியிடமிருந்து விலகிச் சென்றார்.
37
சைஃப் அலி கான் மற்றும் ரோசா:
சைஃப் அலி கான் 1991 இல் 21 வயதில் அம்ரிதா சிங்கை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, அவர் இத்தாலிய மாடல் ரோசா கட்டலானோவுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். இது அம்ரிதாவுக்குத் தெரிந்ததும், அவர்களின் உறவில் விரிசல் விழ தொடங்கின, இது விவாகரத்தில் முடிந்தது. 2004 இல், சைஃப் மற்றும் அம்ரிதா இருவரும் பிரிந்தனர்.
47
ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா:
பிரியங்கா சோப்ரா மற்றும் ஷாருக்கான் 'டான் 2' படப்பிடிப்பின் போது காதலிப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கின. இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டனர். செய்திகளின்படி, கௌரி கான் ஷாருக்கானை விட்டுப் பிரியவும் யோசித்தார். ஆனால் இறுதியில் ஷாருக்கானும் பிரியங்காவும் பிரிந்தனர்.
57
ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர்:
ஸ்ரீதேவி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் வாழ்க்கையில் வந்தபோது, அவர் ஏற்கனவே திருமணமானவர். அவர் ஸ்ரீதேவியை ரகசியமாக காதலித்தார், ஆனால் தனது காதலை நீண்ட காலம் மறைக்க முடியவில்லை. விரைவில், அவரது அப்போதைய மனைவி மோனா கபூருக்கு அவர்களின் காதல் பற்றித் தெரியவந்தது, பின்னர் அவர் போனியை விவாகரத்து செய்தார்.
67
ஹிரித்திக் ரோஷன் மற்றும் கங்கனா ரனாவத்:
ஹிரித்திக் ரோஷன் 2000 ஆம் ஆண்டு சுசேன் கானை மணந்தார், ஆனால் 2014 இல் அவர்களின் உறவு முறிந்து விவாகரத்து பெற்றனர். அவர்களின் விவாகரத்திற்கு கங்கனா ரனாவத் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்த நேரத்தில் கங்கனா ஹிரித்திக்குடன் தொடர்பில் இருந்தார்.
77
அமிதாப் பச்சன் மற்றும் ரேகா:
அமிதாப் பச்சனின் கதையும் இதுதான். திருமணத்திற்குப் பிறகும் ரேகாவுடன் நெருக்கமாக இருந்தார் பச்சன். அவர்களின் உறவு பற்றிய செய்தி ஜெயா பச்சனின் காதில் விழுந்ததும், ஜெயா மிகவும் வருத்தப்பட்டார். இறுதியில் ஜெயா பச்சன் ரேகாவை வீட்டிற்கு அழைத்து 'பிக் பி'யிடமிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் ரேகா மற்றும் அமிதாப் பிரிந்தனர்.