
பிரம்மாண்ட வெற்றிப் படங்கள் என்றதும், ரசிகர்களுக்கு பெரும்பாலும் நினைவுக்கு வருவது அந்த படத்தின் ஹீரோக்கள் தான். அந்த படத்தில் நடித்த கதாநாயகிகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வது இல்லை. ஆனால் இதை தாண்டி, ஒரு சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். அப்படிப்பட்ட சில ஹீரோயின்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சிம்ரன் - கலிசுந்தாம் ரா, நரசிம்ம நாயுடு
நடிகை சிம்ரன் அந்தக் காலத்து இளைஞர்களின் கனவு நாயகி. தெலுங்கில் சிம்ரன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 2000ஆம் ஆண்டு சிம்ரன், வெங்கடேஷுடன் 'கலிசுந்தாம் ரா' படத்தில் நடித்தார். அது பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன் பிறகு பாலகிருஷ்ணாவுடன் நடித்த நரசிம்ம நாயுடுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
ரிச்சா பல்லாடு - நுவ்வே காவலி
நடிகை ரிச்சா பல்லாடு, நடிகர் தருணுடன் இணைந்து நுவ்வே காவலி படத்தில் நடித்தார். இவர்கள் இருவருக்கும் இதுவே முதல் படம். அதற்கு முன்பு தருண் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார். ரிச்சா பல்லாடு நுவ்வே காவலி படத்திற்குப் பிறகு மெதுவாக தெலுங்கு சினிமாவிலிருந்து விலகி தற்போது குழந்தை - குடும்பம் என செட்டில் ஆகி விட்டார்.
சோனாலி பிந்த்ரே, ஆர்த்தி அகர்வால் - இந்திரா
மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் சோனாலி பிந்த்ரே, ஆர்த்தி அகர்வால் ஆகியோர் இந்திரா படத்தில் நடித்தனர். பி. கோபால் இயக்கத்தில் வெளிவந்த இந்திரா படம், பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் சோனாலி பிந்த்ரேவும், ஆர்த்தி அகர்வாலும் போட்டி போட்டு நடித்தனர். ஆர்த்தி அகர்வால் 2015இல் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.
இலியானா - போக்கிரி
தெலுங்கு சினிமாவில் மின்னல் வேகத்தில் முன்னணி கதாநாயகையாக மாறியவர் இலியானா, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக போக்கிரி படத்தில் நடித்தார். தெலுங்கு சினிமா உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் போக்கிரி படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனால் இலியானா ஒரே இரவில் முன்னணி நட்சத்திரமாக மாறினார். சில காலத்திற்கு முன்பே இலியானா தெலுங்கு சினிமாவிலிருந்து விலகினார்.
காஜல் - மகதீரா:
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் நடித்த படம் மகதீரா. அதற்கு முன்பு பிரம்மாண்ட வெற்றி பெற்ற போக்கிரி படத்தை இரண்டு மடங்கு வசூல் சாதனை செய்து முறியடித்து,மகதீரா புதிய பிரம்மாண்ட வெற்றிப் படமாக அமைந்தது.
சமந்தா, பிரணிதா சுபாஷ் - அத்தாரிண்டிகி தாரேதி
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், பவர் ஸ்டார் பவன் கல்யாண் கூட்டணியில் வெளிவந்த அத்தாரிண்டிகி தாரேதி படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்தப் படத்தில் சமந்தா, பிரணிதா சுபாஷ் ஆகியோர் ஹீரோயினாக நடித்திருந்தனர்.
அனுஷ்கா ஷெட்டி - பாகுபலி 1, பாகுபலி 2
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியான அனுஷ்கா, பாகுபலி 1, பாகுபலி 2 படங்களில் தேவசேனையாக மிளிர்ந்தார். ராஜமௌலி உருவாக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன. பிரபாஸை பாகுபலி 1, பாகுபலி 2 படங்கள் பான் இந்தியா நட்சத்திரமாக மாறியது.