லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்குமார் ஹீரோவாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் யோகிபாபு, ரெஜினா கசெண்ட்ரா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் பிரபலம் ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24
vidaamuyarchi Ajith
விடாமுயற்சி திரைப்படம் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. படத்தின் கதைப்படி வெளிநாட்டுக்கு சுற்றுலா கணவன், மனைவி இருவரும் சுற்றுலா செல்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மனைவி காணாமல் போய்விடுகிறார். அவரை கணவர் எப்படி மீட்டார் என்பது தான் விடாமுயற்சி படத்தின் கதைக்களம். இப்படத்தை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் ரீமேக் உரிமை விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர். அநேகமாக இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விடாமுயற்சி படத்தின் அப்டேட்டும் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது அப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
44
vidaamuyarchi Censor
அதன்படி விடாமுயற்சி படத்தில் 5 இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு கத்திரி போட்டுள்ளது சென்சார் போர்டு. அதுமட்டுமின்றி அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதன் காரணமாக இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இப்படம் 2 மணிநேரம் 30 நிமிடம் 46 விநாடிகள் ரன்னிங் டைம் கொண்டுள்ளதும் அந்த சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. விடாமுயற்சி படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டதால் விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகவும் வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.