TTF வாசன், குஷிதா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்த டூயட் பாடலை அந்தமான், கேரளா, பாண்டிச்சேரி போன்ற எழில்மிகு பகுதிகளில் படமாக்கி வருகிறார்களாம். ஐபிஎல் திரைப்படத்தில் கிஷோர், அபிராமி, சிங்கம்புலி, ஹரீஷ் பேரடி, ஜான் விஜய், 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், திலீபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரிப்பில், விரைவில் வெளியாகவிருக்கும் ஐபிஎல் திரைப்படத்தின் பிண்ணனி இசை சேர்ப்பு பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்... பூட்டை உடைத்த புள்ளிங்கோ; டிடிஎப் வாசன் கடையில் நடந்த திருட்டு - ஷாக்கிங் வீடியோ