பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற மிட் வீக் எவிக்ஷனில் பெண் போட்டியாளர் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
24
Hindi Bigg Boss
இதில் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் தொகுத்து வழங்கி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்டது இந்தியில் தான். அங்கு இந்நிகழ்ச்சி தற்போது 17 சீசன்கள் முடிவடைந்து தற்போது 18வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட்டது.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை கலக்கியது ஒரு தமிழ் பெண் தான். அவர் வேறுயாருமில்லை நடிகை ஸ்ருத்திகா தான். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ, வசந்த பாலன் இயக்கிய ஆல்பம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஸ்ருத்திகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தி டைட்டிலையும் தட்டிச் சென்றார்.
44
Shrutika Eliminated in Hindi Bigg Boss
இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஸ்ருத்திகா, தன்னுடைய செயலால் இந்தி ரசிகர்களை கவர்ந்தார். அதுமட்டுமின்றி ஸ்ருத்திகாவுக்காக தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் 90 நாட்களைக் கடந்துவிட்ட ஸ்ருத்திகா பைனலில் கப் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது முற்றிலும் unfair எவிக்ஷன் என சாடி வருகின்றனர்.