2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் அதையொட்டி ஏராளமான படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மத கஜ ராஜா, கேம் சேஞ்சர் உள்பட மொத்தம் 8 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. தியேட்டருக்கு போட்டியாக தொலைக்காட்சிகளிலும் பொங்கல் விருந்தாக போட்டி போட்டு புதுப்படங்களை ஒளிபரப்ப உள்ளனர். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி ஆகியவற்றில் பொங்கல் ஸ்பெஷலாக என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை பார்க்கலாம்.
25
Vijay TV Pongal Special Movies
விஜய் டிவி
விஜய் டிவியில் பொங்கல் தினத்தன்று நண்பகல் 12.30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படமும், அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான அமரனும் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் மாட்டுப் பொங்கல் தினத்தன்று காலை 11 மணிக்கு அரண்மனை 4, மதியம் 3 மணிக்கு மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் மாலை 6 மணிக்கு கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
35
Zee Tamil Pongal Special Movies
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ந் தேதி காலை 10.30 மணிக்கு விஷால் நடித்த ரத்னம், மதியம் 3.30 மணிக்கு ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், மாலை 6.30 மணிக்கு தளபதி விஜய் நடித்த கோட் ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதேபோல் மாட்டுப்பொங்கல் தினமான ஜனவரி 15ந் தேதியன்று காலை 10.30 மணிக்கு சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த ஆச்சார்யா திரைப்படமும், மதியம் 3.30 மணிக்கு அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் சிறப்பு திரைப்படங்களாக அஜித் நடித்த துணிவு, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2, சூரி ஹீரோவாக நடித்த கருடன், சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, விவேக், ராஷி கண்ணா நடித்த அரண்மனை 3, சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான டான் ஆகியவை ஒளிபரப்பாக உள்ளன.
55
Sun TV Pongal Special Movies
சன் டிவி
சன் டிவியில் இந்த ஆண்டு பொங்கலுக்கு காலை 11 மணிக்கு நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்த பிளெடி பெக்கர் திரைப்படமும், அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்த லால் சலாம் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.