Pushpa 2 vs Toxic
ஒரே படத்தில் பான் இந்தியா ஹீரோக்களாக உருவெடுத்தவர்கள் என்றால் அது யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் தான். இதில் யாஷ், கேஜிஎஃப் படம் மூலமும், அல்லு அர்ஜுன் புஷ்பா படம் மூலமாகவும் பான் இந்தியா நட்சத்திரங்களாக உருவெடுத்தனர். இந்த இரண்டு படங்களுக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. இந்த இரண்டு படங்களின் முதல் பாகங்களை காட்டிலும் அதன் இரண்டாம் பாகங்கள் தான் சக்கைப்போடு போட்டன. குறிப்பாக கேஜிஎஃப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடி வசூலித்தது. அதேநேரத்தில் அண்மையில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.
Pushpa 2
கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது டாக்ஸிக் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்திலும் கேங்ஸ்டராக நடிக்கிறார் யாஷ். நேற்று நடிகர் யாஷின் பிறந்தநாளன்று டாக்ஸிக் படக்குழுவினர் அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில் பப்பிற்கு சென்று அழகிகளுடன் ஆட்டம் போடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருவதோடு சில சாதனைகளையும் தகர்த்தெறிந்துள்ளது.
இதையும் படியுங்கள்... யாஷின் பர்த்டே ட்ரீட்டாக வெளிவந்த டாக்ஸிக் கிளிம்ப்ஸ் - கேஜிஎப் வாட அடிக்குதே பாஸ்!
Toxic Movie
டாக்ஸிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தான் தற்போது 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட கிளிம்ஸ் வீடியோ என்கிற சாதனையை படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானபோது அதன் இந்தி வெர்ஷன் 24 மணிநேரத்தில் 27.67 மில்லியன் பார்வைகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை டாக்ஸிக் பட கிளிம்ப்ஸ் வீடியோ 13 மணிநேரத்தில் முறியடித்து மாஸ் காட்டி உள்ளது.
Toxic Beat Pushpa 2 Record
டாக்ஸிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான 13 மணிநேரத்திலேயே புஷ்பா 2 படத்தைவிட அதிக பார்வைகளை பெற்றுவிட்டது. தற்போது அதன் வியூஸ் 50 மில்லியனை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவிலேயே 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற கிளிம்ப்ஸ் வீடியோ என்கிற பெருமையை டாக்ஸிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பெற்றுள்ளது. இதனால் படக்குழுவும் உற்சாகம் அடைந்துள்ளனர். கிளிம்ப்ஸ் வீடியோவுக்கே இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளதால் டாக்ஸிக் படத்தின் மீதான் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இதையும் படியுங்கள்... புஷ்பா 2 நியூ வெர்ஷன்! பக்கா ஸ்கெச் போட்டு மீண்டும் வசூலை அல்ல படக்குழு போட்ட புதிய திட்டம்!