1000 கோடி வசூலுக்கு ரெடியான ரஜினிகாந்தின் கூலி; எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Jan 09, 2025, 07:27 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
1000 கோடி வசூலுக்கு ரெடியான ரஜினிகாந்தின் கூலி; எப்போ ரிலீஸ் தெரியுமா?
coolie

வேட்டையன் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, ரெபா மோனிகா ஜான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

24
Coolie Rajinikanth

கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கூலி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி அப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி, சுதந்திர தின விடுமுறையை ஒட்டி திரைக்கு கொண்டு வரும் ஐடியாவில் உள்ளதாம் படக்குழு.

இதையும் படியுங்கள்... ரஜினியின் கூலி பட ஷூட்டிங் எப்போ முடியும்? சூப்பர் ஸ்டார் சொன்னது இதுதான்!

34
Rajini, Lokesh Kanagaraj

ஏனெனில் இதற்கு முன்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி தான் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதனால் அதே சென்டிமென்டை தற்போது கூலி படத்திற்கும் பாலோ பண்ண முடிவெடுத்திருக்கிறார்களாம். கூலி படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூலை அள்ளி, தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக உருவெடுக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

44
Coolie Movie Release Update

கூலி படத்தின் அப்டேட்டும் விரைவில் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த இப்படத்தில் சிக்கிடி சிக்கிடி பாடல்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் செம டிரெண்டிங்காக உள்ளது. அப்பாடலை டி.ராஜேந்தர் பாடி இருக்கிறார். அதில் ரஜினியின் நடனமும் வேறலெவலில் இருந்ததால் அந்த பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் செம வைப் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற பொங்கல் பண்டிகைக்கும் கூலி படத்தில் இருந்து சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்... 74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ரஜினிகாந்த்; அவர் தவிர்க்கும் இந்த உணவுகள் தான் காரணமாம்!

Read more Photos on
click me!

Recommended Stories